இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 194 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 70 ஆயிரத்து 50 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி, பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வே.க. ராஜீவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி (மதுரை மேற்கு), எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), ஏ. குழந்தைராணி நாச்சியார் (சிவகங்கை), டி. இளங்கோவன் (மானாமதுரை), ஆர். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
31-10-2026
31-10-2026
31-10-2026