October 31, 2026

மாற்று திறனாளிகளுக்கு ஏஐ சார்ந்த நவீன உதவி உபகரணம் வாங்க நிதி

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000 அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு செயற்கை உறுப்பு, மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம், பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் காக்ளியர் இம்பிளான்ட் பேட்டரி போன்ற பிற உயர்வகை உதவி உபகரணங்களை வாங்குவதற்கான உதவித்தொகை இது.

Spread the love