November 5, 2026

திருமணத்துக்கான அண்ணன் சீர் திட்டம்: தங்க நாணயம், பட்டுச் சேலைகள் கொள்முதல் செய்ய டெண்டர்

சென்னை: தமிழகத்​தில் பெண்​களின் திரு​மண நாளில் தமிழக அரசின் சார்​பில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்​டுப்​புடவை அண்​ணன் சீராக வழங்​கப்​படும் என்று தவெக தனது தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​திருந்​தது.

இந்​தத் திட்​டத்​தைச் செயல்​படுத்த ரூ.812 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டது. அதைத் தொடர்ந்து 8 கிராம் தங்க நாணயங்​கள், பட்​டுப் புட​வை​கள் தலா 60,000 கொள்​முதல் செய்​வதற்​கான டெண்​டர் அறி​விப்பை சமூகநலத் துறை தற்​போது வெளி​யிட்​டுள்​ளது.

இது​குறித்து சமூகநலத் துறை வெளி​யிட்ட அறி​விப்​பு: பிஐஎஸ் ஹால்​மார்க் முத்​திரை​யுடன் கூடிய 22 காரட் (916) 8 கிராம் நாணயங்​கள் வழங்​கப்​பட வேண்​டும். 22 மி.மீ. விட்​டம் கொண்ட நாணயத்​தின் ஒரு பக்​கத்​தில் தமி​ழில் அரசு இலச்​சினைப் பொறிக்​கப்​பட்​டிருக்க வேண்​டும். இதற்கு வைப்​புத் தொகை​யாக ரூ.6 கோடி செலுத்த வேண்​டும்.

கடந்த 3 நிதி​யாண்​டுகளின் சராசரி ஆண்டு வரு​வாய் ரூ.750 கோடிக்கு குறை​யாமல் இருக்க வேண்​டும். தங்​கத்​தின் விலை, கொள்​முதல் ஆணை நாளின் காலை விலை​யின்​படி கணக்​கிடப்​பட்டு, செய்​கூலி உட்​பட கட்​ட​ணங்​கள், ஜிஎஸ்டி சேர்க்​கப்​படும். அவற்றை 30 நாட்​களுக்​குள் விநியோகிக்க வேண்​டும். விண்ணப்​பங்​களை டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

தவிர சில்க் மார்க், கைத்​தறி முத்​திரை பெற்ற 100% தூய மல்​பெரி பட்​டுப் புட​வை​கள் தரப்​பட வேண்​டும். புடவை 5.50 மீட்​டர், ரவிக்​கைத் துணி 0.70 மீட்​டர் என மொத்​தம் 6.20 மீட்​டர் நீளமும், 430 கிராம் எடையும் (பட்டு 380, ஜரிகை 50) கொண்​டிருக்க வேண்​டும்.

மேலும், வைப்​புத்​தொகை​யாக ரூ.24 லட்​சம் செலுத்த வேண்​டும். கடந்த 3 நிதி​யாண்​டுகளின் சராசரி ஆண்டு வரு​வாய் ரூ.30 கோடிக்​குக் குறை​யாமல் இருப்​ப​துடன், புட​வை​களை 120 நாட்​களுக்​குள் விநியோகிக்க வேண்​டும்.

விண்​ணப்​பங்​களை டிசம்​பர் 7-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். இதற்​கான ஆவணக் கட்​ட​ணம் ரூ.5,725 ஆகும். கூடுதல் விவரங்​களை www.tntenders.gov.in, www.tnsocialwelfare.tn.gov.in ஆகிய வலை​தளங்​களில் அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love