November 12, 2026

ஒட்டன்சத்திரம் கேதையுறம்பு ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்!

ஒட்டன்சத்திரம், நவ.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் தவித்து வந்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். கார்த்திக் ராஜன் ஆகியோரின் ஆலோசனையின்படி, ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் த. தினேஷ் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூலம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதனால் நீண்டகாலமாக வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த ஏழை, எளிய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டா பெற்ற பயனாளிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

பட்டா பெற்ற பயனாளிகளிடம் பட்டாவைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றபோது எடுத்த புகைப்படம்.

Spread the love