November 12, 2026

ராப்டீ.எச்வி இ-பைக்கின் புதிய வாடிக்கையாளர் மையம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசின் ரூ.25 கோடி முதலீடு பெற்ற ராப்டீ.எச்வி நிறு​வனத்​தின் புதிய வாடிக்​கை​யாளர் மையத்தை முதல்வர் விஜய் காணொலிக் காட்சி வாயி​லாக நேற்று திறந்து வைத்​தார்.

இந்​தி​யாவின் முன்​னோடி உயர்​மின்​னழுத்த மின்​சார இருசக்​கர வாக​னம் (இபைக்) தயாரிப்பு நிறு​வனமான ராப்டீ.எச்வி, சென்னை மணப்​பாக்​கத்​தில் செயல்​பட்டு வரு​கிறது.

குரோம்​பேட்டை எம்​ஐடி, திருச்சி என்​ஐடி கல்​லூரி​களில் பயின்று, டெஸ்லா, விப்ரோ உட்​பட நிறு​வனங்​களில் பணி​யாற்​றிய அனுபவம் கொண்ட தமிழகப் பொறி​யாளர்​களால் தொடங்​கப்​பட்​டது.

இந்த நிறு​வனம் உரு​வாக்​கிய எச்வி-டெக் தொழில்​நுட்​பத்​தின் மூலம் தயாரிக்​கப்​பட்ட டி30, இந்​தி​யாவின் முதல் உயர்​மின்​னழுத்த மின்​சார இருசக்​கர வாக​னமாகும்.

இது 240 வோல்ட் மின்​னழுத்​தக் கட்​டமைப்​பைக் கொண்​டது. மேலும், மின்​சார கார்​களுக்​கான சிசிஎஸ்-2 விரைவு மின்​னேற்ற நிலை​யங்​களி​லும் சார்ஜ் செய்​ய​லாம்.

தற்​போது வாடிக்​கை​யாளர்​களுக்கு மேம்​பட்ட அனுபவத்தை வழங்​கு​வதற்​காக சென்னை பெருங்​குடி​யில் 3 தளங்​களு​டன் புதிய வாடிக்​கை​யாளர் மையத்தை ராப்டீ.எச்வி நிறு​வனம் அமைத்​துள்​ளது.

இந்த மைய​மானது தமிழ்​நாடு தொழில் வளர்ச்சி நிறு​வனத்​தின் (டிட்கோ) ரூ.25 கோடி நிதி​யுத​வியுடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதை முதல்​வர் விஜய் தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலிக் காட்சி வாயி​லாக நேற்று திறந்து வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சி​யில் தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா, தலை​மைச் செயலர் சாய்​குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், டிட்கோ மேலாண்மை இயக்​குநர் கார்த்​தி​கேயன், செயல் இயக்​குநர் வாகே சங்​கேத் பல்​வந்த் மற்​றும் துறைசார்ந்த அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

ஏற்​கெனவே செயல்​பட்டு வந்த தொழிற்​சாலை விற்​பனையகத்தை மேம்​படுத்தி, தற்​போது இந்த புதிய மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இங்கு வாடிக்​கை​யாளர்​கள் வாக​னத்தை நேரில் பார்​வை​யிட்டு அதன் தொழில்​நுட்​பங்​களை அறிந்​து​கொள்​வதுடன், நிறு​வனத்​தின் தொழில்​நுட்​பக் குழு​வினருடன் கலந்​துரையாட​வும், சோதனை ஓட்​டம் மேற்​கொள்​ளவும் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

புதிய புத்​தொழில் முதலீட்​டுக் கொள்​கை​யின்​கீழ், ராப்டீ எனர்ஜி நிறு​வனத்​தில் டிட்கோ ரூ.25 கோடியை முதலீடு செய்​துள்​ளது. மேலும், அக்​னிகுல் காஸ்​மோஸ் உள்​ளிட்ட பிற ஸ்​டார்ட் அப் நிறு​வனங்​களி​லும் டிட்கோ முதலீடு செய்​ய​வுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Spread the love