குறுகிய ரீல்ஸ் வீடியோக்களுக்குப் பெயர்பெற்ற இன்ஸ்டாகிராம், நீண்ட நேர வீடியோக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. 90 நிமிடங்கள் வரை வீடியோக்களைப் பதிவேற்ற அனுமதிக்கும் ‘Features’ வசதியை மெட்டா சோதித்து வருகிறது.
பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனை, தற்போது அமெரிக்காவிலும் குறிப்பிட்ட சில படைப்பாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கவில்லை.
இதன் மூலம் பாட்காஸ்ட், நேர்காணல், பயணப் பதிவு, நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற நீண்ட படைப்புகளை இன்ஸ்டாகிராமிலேயே வெளியிட வாய்ப்பு உருவாகும். குறுகிய வீடியோக்கள் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் படைப்பாளர்கள், அவர்களிடம் விரிவான உள்ளடக்கத்தையும் கொண்டு சேர்க்க முடியும்.
நீண்ட நேர வீடியோக்களுக்கான இந்த முயற்சி, யூடியூப் உள்ளிட்ட தளங்களுடனான போட்டியை அதிகரிக்கக்கூடும். எனினும், இதனால் யூடியூப் அல்லது ஓடிடி தளங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்று இப்போதே கூற முடியாது. பயனர்களின் வரவேற்பும், படைப்பாளர்களுக்குக் கிடைக்கும் பலன்களுமே இதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
இந்த வசதியில் கட்டணத் திரைப்படங்கள், ஒவ்வொரு பார்வைக்கும் கட்டணம் வசூலிக்கும் முறை அல்லது விளம்பர வருவாய்ப் பகிர்வு எப்படி அமையும் என்பது குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தியாவில் எப்போது?
இந்திய அறிமுகத்துக்கான உறுதியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சோதனை முடிவுகளையும் மெட்டாவின் அடுத்தகட்ட அறிவிப்புகளையும் பொறுத்தே இந்தியப் பயனர்களுக்கான வசதி குறித்து தெளிவு கிடைக்கும்.

More Stories
“மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும்” – சுனில் மிட்டல் வலியுறுத்தல்
தங்கம் விலை தொடர் சரிவு: இன்றைய சந்தை நிலவரம்
தங்கம் விலை கிராம் ரூ.13,000-க்கும் கீழ் சரிந்தது: 5 காரணங்களை அடுக்கும் சந்தை வல்லுநர்கள்