November 14, 2026

கீழக்கரையில் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்ட விழிப்புணர்வு முகாம்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரதம மந்திரியின் ‘சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் கணேசன், செயற்பொறியாளர் வே. விஜயா ஆகியோர் பங்கேற்று, வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் முறை, அரசு வழங்கும் மானியச் சலுகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். மேலும், சூரிய மின்சாரம் மூலம் மின்கட்டணத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என எடுத்துரைத்து, தகுதியுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இம்முகாமில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Spread the love