November 16, 2026

பரணி பார்க் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கரூர், நவ.16

கரூர் பரணி பார்க் பள்ளியில் சாமியப்பா கவுண்டர் நினைவு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. விழாவுக்கு பரணி கல்வி குழும தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கிஅறிவியல் கண்காட்சி, ஓவியம், நம்மாழ்வார் மூலிகை தோட்டம், பாரம்பரிய உணவு திருவிழா ஆகியவற்றை தொடங்கி வைத்தார். செயலர் பத்மாவதி மோகன ரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதையடுத்து, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் இந்த அறிவியல் கண்காட்சியின் மூலம் குழு உணர்வு, தலைமை பண்பு, அறிவியல் மனப்பான்மை, ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது என்றார். இதில் வியப்பூட்டும் அறிவியல் அரங்குகள், பாரம்பரிய உணவு கொண்டாட்டம், 2 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழில் பெயர் எழுதும் அரங்கு, ஜப்பான் பண்பாடு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரணி கல்வி குழும ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த கண்காட்சியில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள் உள்பட 336 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகள் 1,834 இளம் அறிவியல் விஞ்ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love