November 16, 2026

பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. தொலைவு ஓடிய வந்தே பாரத்

புதுடெல்லி: பிரேக் செயலிழந்த நிலை​யில் வந்தே பாரத் ரயில் 463 கி.மீ. தொலைவை கடந்துள்​ளது. இது​குறித்து உயர்​நிலை விசாரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

கடந்த அக்​டோபர் 24-ம் தேதி ஜார்க்​கண்​டின் ஹதியா ரயில் நிலையத்​தில் இருந்து உத்​தர பிரதேசத்​தின் ஜான்சி பகுதிக்கு வந்தே பாரத் ரயிலை கொண்டு செல்ல முடிவு செய்​யப்​பட்​டது. பயணிகள் இல்​லாத அந்த ரயிலை, சரக்கு ரயில் இன்​ஜின் மூலம் கொண்டு செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

சரக்கு ரயி​லின் இன்​ஜின் ஓட்​டுநர் முதல்​கட்​ட​மாக வந்தே பாரத் ரயி​லின் பிரேக் சிஸ்​டத்தை சோதனை செய்​தார். ஆனால் பிரேக் செயலிழந்த நிலை​யில் இருப்​பதை அவர் கண்​டுபி​டித்​தார். இது​குறித்து அங்​கிருந்த அதி​காரி​களிடம் அவர் எடுத்​துரைத்​தார். ஆனால் ரயில்வே அதி​காரி​கள், பிரேக் சிஸ்​டம் நல்ல முறை​யில் இருப்​ப​தாக கூறி ரயிலை கொண்டு செல்ல உத்​தர​விட்​டனர்.

பிரேக் செயலிழந்த நிலை​யில் சுமார் 463 கி.மீ. தொலை​வுக்கு வந்தே பாரத் ரயிலை, இன்​ஜின் ஓட்​டுநர் ஓட்​டிச் சென்​றார். உத்​தர பிரதேசத்​தின் சந்​தவுலி பகுதி​யில் அவர் ரயிலை நிறுத்​தி​விட்​டார். அதற்கு மேல் ரயிலை இயக்​கு​வது சாத்​தி​யமில்லை என்று அவர் திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார்.

இது​தொடர்​பாக ரயில்வே மூத்த அதி​காரி​களிடம் அவர் எழுத்​துப் பூர்​வ​மாக புகாரும் அளித்​தார். இது​குறித்து தென்​கிழக்கு ரயில்வே நிர்​வாகம் உயர்​நிலை விசா​ரணையை நடத்தி வரு​கிறது. தவறிழைத்த ரயில்வே ஊழியர்​கள் மற்​றும் அதி​காரி​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று மூத்த அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர்.

Spread the love