மதுரை; ‘தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவனாக கூறிக்கொள்ளும் வெங்கடேசன் எம்.பி., ஒரு கார்ப்பரேட் நபர் போல் எப்படி நடந்து கொள்ள முடிகிறது’ என, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வியந்து கூறினார்.
, தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிட்ட, ‘மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக அடைந்த வேதனையை வெளியில் சொல்ல முடியாது.2024ல்நீதிபதிமகாதேவனுடன்இணைந்து தீர்ப்பு ஒன்றைவழங்கினேன்.நுாலகங்களுக்குபுத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக2019ல்வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அவ்வழக்கின் விசாரணை 2024ல் வந்தது. அப்போது புத்தக கொள்முதலில் இனி மோசடி நடக்காமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்களை தீர்ப்பில் வழங்கியிருந்தேன். தற்போது கோவை ஈ.வெ.ரா., அறிவுலகம் நுாலகத்தில் மீண்டும் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்.
அந்த அறிவுலகத்தில் உள்ள அனைத்து ரேக்குகளிலும் அகல்விளக்கு புத்தகங்கள் தான் இருக்கிறது. அந்த பாவம் கழிய, மஹா பெரியவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதியின் இந்த பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன், தன் சமூக ஊடக பக்கத்தில் ‘புத்தக கொள்முதலில் நடந்திருப்பது ஊழல். அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அது தான் நீதிபதிகளின் வேலை. நடந்திருப்பது பாவம்; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வது ஜோதிடர்களின் வேலை’ என, கிண்டலாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாவது:
புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நகைச்சுவை உணர்விற்காக அப்படி கூறினேன். அதற்கு மதுரை எம்.பி., வெங்கடேசன், என் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது போல பதிவிட்டிருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தேன். ரயில் ஏறுவதற்கு முன், உயர் ரக பென்ஸ் காரில் ஒருவர், ‘பிராண்டட்’ ஆடை, காலணி அணிந்து வந்திறங்கினார்.
நான், ‘கார்ப்பரேட் நபராக இருக்கும்’ என, முதலில் நினைத்தேன். அருகில் வந்த பின் தான், ‘வெங்கடேசன் சார்… நீங்களா?’ என்றேன். அவர், முதல் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் ஏற முயன்றார். நான் வேறொருபுறம் செல்வதை பார்த்து, ‘நீதிபதி சார் எங்கு செல்கிறீர்கள்?’ என, கேட்டார்.
அதற்கு, ‘நான் ஸ்லீப்பர் வகுப்பில் தான் வழக்கமாக பயணிப்பேன். என் இருக்கை எண், எஸ் 3 – 23’ என்றேன். ஒரு நீதிபதியாக, நான் எப்படி பணியாற்ற வேண்டும் என, அவர் எனக்கு அறிவுறுத்துகிறார்.
அவர், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவனாக கூறிக் கொள்கிறார். ஆனால், பென்ஸ் கார், பிராண்டட் ஆடைகளை அணிகிறார். புத்தகங்கள் எழுதுவதன் மூலம் கிடைக்கும் ராயல்டி தொகையை வைத்து இத்தகைய வாழ்க்கை முறையை தொடர்ந்து நடத்த முடியுமா என, எனக்கு தெரியவில்லை.
எதற்காக இதை கூறுகிறேன் என்றால், இதுபோன்ற முறைகேடு சம்பவங்கள் கவனத்தையும், ஆற்றலையும் திசை திருப்புகிறது.இவ்வாறு நீதிபதி கூறினார்.

More Stories
சொத்து ஆவணங்கள் இனி தபாலில்! தமிழக அரசு
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு
சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையங்கள்