மும்பை: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்துப் பேசினர்.
மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் மூவரும் நடந்தபடி உரையாடினர். அங்கிருந்த சிறுவர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடியதுடன், சாலையோரக் கடைகளிலும் உணவருந்தினர்.
நவம்பர் 17ஆம் தேதி வில்லியம் ஆட்டோ ஓட்ட, அதில் கேட் பயணித்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நவம்பர் 18ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறைகளில் இந்தியா–பிரிட்டன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

More Stories
ராஜீவ், சோனியா சென்ற அதே உணவகத்தில் காதலியுடன் ராகுல் – நூல் வெளியீட்டு நிகழ்வில் வெளியான ரகசியம்
மகாராஷ்டிராவில் பெண் கைதிகளுக்கு முதல் திறந்தவெளி சிறை குடியிருப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்