November 19, 2026

குல்காம் தாக்குதல் தீவிரவாதியிடம் வீடியோ காலில் பேசி சரணடைய வேண்டுகோள் விடுத்த பாதுகாப்பு படையினர்

ஸ்ரீநகர்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது லத்தீப் பட், சுட்டுக் கொல்​லப்​படுவதற்கு முன்​பாக, அவரை சரணடையுமாறு வீடியோ காலில் பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்த தகவல் வெளியாகி உள்​ளது.

ஜம்மு-காஷ்மீரின் குல்​காம் மாவட்டத்​தில் உள்ள சிஆர்​பிஎப் முகாம் மீது கடந்த வாரம் தீவிரவாதி​கள் நடத்​திய தாக்​குதலில் 3 வீரர்​கள் காயமடைந்​தனர். இதையடுத்து, அப்​பகுதி​யில் தீவிர​வாதி​களுக்கு எதிராக பாது​காப்​புப் படை​யினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்​தினர்.

இந்​நிலை​யில், குல்​காம் மாவட்​டம், ஜங்​கல்​போரா கிராமத்​தில் நேற்று நடை​பெற்ற துப்​பாக்​கிச் சண்​டை​யில் லஷ்​கர்-இ-தொய்பா அமைப்​பின் தளபதி முகமது லத்​தீப் பட் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அவர் சுட்​டுக்​கொல்​லப்​படுவதற்கு முன்​பாக, பாது​காப்​புப் படை அதி​காரி​கள் வீடியோ காலில் அவரைத் தொடர்​பு​கொண்டு சரணடையுமாறு கேட்​டுக்​கொண்​டனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரி​வித்​தார்.

அவரிடம் பாது​காப்​புப் படை அதி​காரி​கள் வீடியோ காலில் பேசியபோது, “நான் அல்​லா​வைச் சந்​திக்​கப் போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறேன். எல்​லாம் வல்ல இறைவன் அல்லா என்​னுடன் இருக்​கிறார்” என்று அவர் கூறு​வது அந்த வீடியோவில் பதிவாகி​யுள்​ளது. அதற்கு அந்த அதி​காரி, “நாங்​கள் உங்​களு​டன் இருக்​கிறோம்” என்று கூறி, அவரைச் சரணடையுமாறு வலியுறுத்​தினார். ஆனால், லத்​தீப் பட் சரணடைய மறுத்து விட்​டார். இதையடுத்து, லத்​தீப் சுட்​டுக் கொல்லப்​பட்​டார்.

லத்​தீப் பட் கொல்​லப்​பட்​ட​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​படுவதற்கு சுமார் 2 மணி நேரத்​துக்கு முன்பே, சிஆர்​பிஎப் தலைமை இயக்​குநர் ஜி.பி. சிங் “வாழ்த்​துகள் நண்​பர்​களே! சில உணவு​கள் குளிர்ந்த பிறகுதான் சிறப்​பாக இருக்​கும். குளிரான வானிலை​யில் கூட இது பொருந்​தும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

சிஆர்​பிஎப் உயர் அதி​காரி​யின் இந்​தப் பதிவைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்​மீர் காவல் துறையும் காலை 10.20 மணிக்கு எக்ஸ் தளத்​தில், “நீங்​கள் ஓடலாம்; ஆனால் ஒளிந்​துக் கொள்ள முடி​யாது” என்று பதி​விட்​டது.

இது​குறித்து, குல்​காம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அனயத் அலி சவுத்ரி கூறும்​போது, “லத்​தீப் பாது​காப்​புப் படை​யினரை நோக்​கிச் சுடத் தொடங்​கிய​தால் துப்​பாக்​கிச் சண்டை தீவிரமடைந்​தது. லத்​தீப், ஒரு மசூதிக்​குள் பதுங்​கி​யிருந்​தார். சரணடையுமாறு பாது​காப்​புப் படை​யினர் பலமுறை வேண்டுகோள் விடுத்​தும் அவர் அதனை ஏற்க மறுத்​தார். இதையடுத்து நடை​பெற்ற துப்​பாக்​கிச் சண்​டை​யில் லத்​தீப் சுட்டுக் கொல்​லப்​பட்​டார்” என்​றார்.

Spread the love