13 ஆண்டுகால எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள GTA 6, கேமிங் துறையைத் தாண்டி பல்வேறு தொழில்களுக்கும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகச் செய்தி தெரிவிக்கிறது.
₹5,999 விலையிலான இந்த கேமால் சோனியின் பிளேஸ்டேஷன், மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் மற்றும் கேமிங் உபகரணங்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் செப்டம்பர் மாத பிஎஸ்5 விற்பனை 22%, அதன் விற்பனை வருவாய் 43% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு நேர உணவு டெலிவரி, யூடியூப் வீடியோக்கள், ரீல்ஸ் மற்றும் நேரலை ஒளிபரப்புகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.
சுமார் 1.7 கோடி பேர் கேமை வாங்குவார்கள் என்ற கணிப்பால், தயாரிப்பாளரான Rockstar Games மற்றும் அதன் தாய் நிறுவனமான Take-Two Interactive பெரும் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
ரூ.96,000-க்கு கீழ் தங்கம் விலை: 10 நாட்களில் ரூ.10,000 வீழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ஒரு சவரன் ரூ.97,720க்கு விற்பனை!!
ரூ.1 லட்சத்துக்கும் கீழ் சரிந்த தங்கம் விலை: பவுன் ரூ.99,760-க்கு விற்பனை