November 20, 2026

மரம் நடும் திட்டத்துக்கு ஆதரவு கோரி முதல்வர் விஜய்யுடன் நடிகர் விவேக் மனைவி சந்திப்பு

சென்னை: மறைந்த நகைச்​சுவை நடிகர் விவேக்​கின் மனைவியும், கிரீன்கலாம் அமைப்​பின் நிறு​வனரு​மான அருட்​செல்வி, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை ேநற்று சந்தித்தார்.

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இன்று (நேற்று) எனது கணவர் விவேக்கின் 66-வது பிறந்​தநாள். முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற பிறகு அவரை இந்த நல்ல நாளில் மரியாதை நிமித்​த​மாக சந்​தித்​தேன்.

இந்த சந்​திப்​பின்​போது, 2010-ம் ஆண்​டில் எனது கணவர் தொடங்​கிய திட்​ட​மான கிரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்​கன்​றுகள் நடும் திட்​டம் பற்றி பேசினேன். அந்த திட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும்​படி கேட்​டேன். அரசு ஆதரவு தரும் என்று முதல்​வர் உறுதி அளித்​தார். குடும்​பத்தை பற்​றியும் அவர் அன்​புடன் விசா​ரித்​தார்.

விவேக் 2021 வரை 11 ஆண்​டுகளில் 37 லட்​சம் மரக்​கன்​றுகளை நட்​டுள்​ளார். அதன்​ பின்​னர் 5 ஆண்​டுகளில் 80 ஆயிரம் மரக்​கன்​றுகளை மட்​டுமே நட்​டுள்​ளேன். தாமத​மாகத்​தான் செயல்​படு​கிறேன். தொடர்ந்து இதை செயல்​படுத்​து​வோம்.

Spread the love