November 24, 2026

ஒட்டன்சத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டச்சாலையில் செயலிழந்த மின் விளக்கு பெயர் பலகை, செயற்கை நீரூற்று!மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!.

ஒட்டன்சத்திரம் நவ.

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே அமைந்துள்ள வட்டச்சாலையில் தமிழர்களின் வீரத்திற்கும், விவசாயத்தின் பாரம்பரியத்திற்கும் அடையாளமாக காளைமாடு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகருக்கு கூடுதல் அழகும், புதுப்பொலிவும் சேர்க்கும் வகையில் ஒளிரும் மின் விளக்கு பெயர் பலகை மற்றும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளன.

இவை ஒட்டன்சத்திரம் நகரின் அடையாளமாகவும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை வரவேற்கும் வகையிலும் அமைந்துள்ளன. ஆனால், நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்ட வேண்டிய ஒளிரும் மின் விளக்கு பெயர் பலகையும், செயற்கை நீரூற்றும் தற்போது செயல்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகின்றன.

இதனால் வட்டச்சாலையின் அழகு குறைந்து காணப்படுவதுடன், நகரின் அடையாளமாக விளங்கும் இந்த அமைப்புகள் பயன்பாடின்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, பழுதடைந்த ஒளிரும் மின் விளக்கு பெயர் பலகை மற்றும் செயற்கை நீரூற்றை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் ஒட்டன்சத்திரம் நகரின் அழகையும், பெருமையையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love