February 13, 2026

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உள்ளடக்கிய இந்திய வரைபட பதிவை நீக்கியது அமெரிக்கா

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உள்ளடக்கிய இந்திய வரைபட பதிவை நீக்கியது அமெரிக்கா

Follow Us

புதுடெல்லி: ஆக்​கிரமிப்பு காஷ்மீர், அக்​சாய் சின் பகு​தி​களை உள்​ளடக்​கிய இந்​திய வரைபடம் தொடர்​பான சமூக வலைதள பதிவை அமெரிக்கா நீக்கி உள்​ளது.

கடந்த 1947-ல் இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது காஷ்மீரின் ஒரு பகு​தியை பாகிஸ்​தான் ஆக்​கிரமித்​தது. அது ஆக்​கிரமிப்பு காஷ்மீர் எனப்​படு​கிறது. அதன் பிறகு கடந்த 1963-ம் ஆண்​டில் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகு​தியை சீனா​வுக்கு பாகிஸ்​தான் வழங்​கியது. அதை சீனா அக்​சாய் சின் என்று அழைக்​கிறது.

ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் அக்​சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்​கிணைந்த பகுதி என்று மத்​திய அரசு உறுதியாக கூறி வரு​கிறது. ஆனால் இவற்றை பிரச்​சினைக்​கு உரிய பகுதி என அமெரிக்கா கூறி வந்​தது.

இந்த சூழலில் இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக இருப்​பதை கவுரவிக்​கும் வகை​யில், அமெரிக்க வர்த்தக பிர​தி​நிதி அலு​வல​கம் எக்ஸ் சமூக வலை தளத்​தில் கடந்த 7ம் தேதி இந்​திய வரைபடத்தை வெளி​யிட்​டது.

அதில் ஆக்​கிரமிப்பு காஷ்மீர், அக்​சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்​கிணைந்த பகு​தி​களாக இடம்​ பெற்​றிருந்​தன. இந்​நிலை​யில், அமெரிக்க வர்த்தக பிர​தி​நிதி அலு​வல​கம் அந்த பதிவை நீக்​கி உள்​ளது.

Spread the love