November 27, 2026

கூட்டுறவு நகைக்கடன்: கிராமுக்கு ரூ.10,000 வரை!

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு, ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.7,000 என்பதிலிருந்து ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடன் தொகை நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதத்துக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படும். எனவே, கிராமுக்கான உச்சவரம்பையும் சந்தை மதிப்பின் 75 சதவீதத்தையும் கணக்கிட்டு, பொருந்தும் தொகையே கடனாக வழங்கப்படும்.

இந்த நடைமுறை புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கும், புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

Spread the love