சென்னை: போடிநாயக்கனூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வும் , முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று (நவ.27) உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பி.பி.பாலாஜி, எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More Stories
27-11-2026
ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு
“பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- அன்புமணி