February 17, 2026

தமிழகத்தில் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து: சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து: சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சிறு​பான்​மை​யினர் மேம்​பாட்டை குறிக்​கோளாக கொண்டு செயல்​படும் 88 கல்வி நிறு​வனங்​களுக்கு நிரந்தர சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்​துக்​கான சான்​றிதழ்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

சிறு​பான்​மை​யின மக்​களின் மேம்​பாட்டை குறிக்​கோளாக கொண்டு செயல்​படும் கல்வி நிறு​வனங்​களுக்​கு, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப்​பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை மூலம் சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்து சான்​றிதழை வழங்க கடந்த 2022 டிச.29-ம் தேதி​யும், மதச்​சார்பு சிறு​பான்​மை​யினர் நிரந்தர சான்​றிதழ் வழங்க 2024, பிப்​.2-ம் தேதி​யும் அரசாணை​கள் வெளி​யிடப்​பட்​டன.

இந்த அரசாணை​களின் அடிப்​படை​யில், தலை​மைச் செயலர் தலை​மையி​லான அதி​காரமளிக்​கப்​பட்ட குழு அமைக்​கப்​பட்​டு, விண்​ணப்​பிக்​கும் கல்வி நிறு​வனங்​களின் விண்​ணப்​பங்​களை ஆய்வு செய்​து, ஒப்​புதல் வழங்கி வரு​கிறது.

அதனடிப்​படை​யில் இது​வரை 370 கல்வி நிறு​வனங்​களுக்கு சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்து சான்​றிதழ்​களும், 56 மொழி​வாரி சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்து சான்​றிதழ்​களும், 314 மதச்​சார்பு சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்​துக்​கான சான்​றிதழ்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதன் தொடர்ச்​சி​யாக குழு​வின் பரிந்​துரைப்​படி பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப்​பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை சார்​பில் சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்து கோரி விண்​ணப்​பித்த கல்வி நிறு​வனங்​களில் 88 கல்வி நிறு​வனங்​களுக்​கு, நிரந்தர சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்​துக்​கான சான்​றிதழ்​களை, தலைமைச் செயல​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வில், துறை அமைச்​சர் எஸ்​.எம்​.​நாசர், மாநில சிறு​பான்​மை​யினர் ஆணைய தலை​வர் ஜோ.அருண், துணைத் தலை​வர் இறையன்​பன் குத்​தூஸ், தலைமைச் செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், சிறு​பான்​மை​யினர் நலத்​துறை செயலர் எ.சர​வணவேல்​ராஜ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Spread the love