வெனிசுலாவில் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்க, அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் புதிய பொது மன்னிப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டாா்.

டெல்சி ரோட்ரிகஸ்
வெனிசுலாவில் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்க, அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் புதிய பொது மன்னிப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டாா்.
முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு, இந்த அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன்மூலம், கடந்த 1999 முதலான அரசியல் மோதல்கள் மற்றும் 2024 அதிபா் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைகளின்போது கைது செய்யப்பட்ட எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
புலம்பெயா்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் வெனிசுலா அரசியல் தலைவா்களும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் வழக்குரைஞா்கள் மூலம் பொது மன்னிப்பு கோரலாம்.

More Stories
அமெரிக்கா – ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை நிறைவு – மத்தியஸ்தர்கள் அறிவிப்பு
திடீரென மிரட்டிய ட்ரம்ப்.. வெளிநடப்பு செய்த ஈரான்.. முடங்கிய முதற்கட்ட பேச்சுவார்த்தை!
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்