
சென்னை: சென்னையில் இன்று (பிப்.28) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15,000-ஐ கடந்து விற்பனையாகிறது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ. 2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையின் தொடர் ஏற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி: மார்ச் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது
Musk’s SpaceX: Starship lands safely… then explodes
Why are QAnon believers obsessed with 4 March?