வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு 20% பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் கடலோர பகுதிகளில் இருந்த ராணுவ தளங்களை எல்லாம் அமெரிக்கப்படை அழித்துவிட்டது. இப்போது ஈரானின் உள்பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஈரான் துறைமுகத்துக்கு கப்பல்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக ஊடகத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பதாவது: தற்போது ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இனி இதன் பாதுகாவலனாக அமெரிக்கா இருக்கும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணத்தை அமெரிக்கா விதிக்கும். இதற்கான நடைமுறை உடனடியாக தொடங்கும். இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி உள்ளார்.

More Stories
ஆயூதபூஜையை முன்னிட்டு பொரி அரிசியின் விலை கிடுகிடு உயர்வு…!!!
அக்டோபர் 16: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!
செல்போன் திரையில் அழைப்பவர் பெயர் இடம்பெற செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை உத்தரவு