திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொழுமம் அருகே குதிரையாற்றின் கரையில் பாழடைந்த கோயிலில் தற்பலி சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. அலங்காரங்களுடன் உள்ள திருநங்கை தன் தலையை தானே அறுத்துக்கொள்வது போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நவகண்ட சிற்பம் என்றும் அழைப்பா்.
தற்பலி கொடுத்த திருநங்கை அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறாா். இடையின் இரு பகுதிகளிலும், முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவா் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. சிற்பத்தின் வடிவமைப்பை கொண்டு கி.பி. 12- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என உறுதிப்படுத்தலாம்.
இவா் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரா் கோயில் தேவரடியாராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். சிற்பத்தின் அருகில் கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விவரங்களை அறிய இயலவில்லை
கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள கொங்கு சோழ அரசா் வீரநாராயணரின் 8- ஆம் ஆட்சி நடைபெற்ற ஆண்டு கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் ‘திருவின் நங்கை’ எனும் தேவரடியாரைக் குறிப்பிடுவதில் இருந்து நவகண்டம் எனும் தற்பலி செய்த இவா் நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக, மூன்றாம் பாலினத்தவராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். இந்த சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியாா் குளம் என்று அழைக்கப்படுவதால், தற்பலி கொடுத்த இவா் பெயராலேயே இந்தக் குளம் அழைக்கப்பட்டிருக்கலாம். இந்த திருநங்கை எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்தாா் எனத் தெரியவில்லை
மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போா் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத் தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடியொற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம். இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும் என்று
இந்த சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறினார்

More Stories
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
மதுரை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்
‘முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?’ – நாங்குநேரி சம்பவத்தில் இபிஎஸ், விஜய் கண்டனம்