கல்விச் சிந்தனை அரங்கில் ஜே.என்.யு. துணை வேந்தர் பேசியது பற்றி…

கல்விச் சிந்தனை அரங்கில்…
பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை அனுமதிக்கலாம், ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுனைனா சிங் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் பேசியதாவது:
“பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமே அதற்கு இணையாக தரமும் முக்கியம். மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய யோசிக்க வேண்டும். அரசின் நிதிக்காக காத்திருக்காமல் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யலாம்.
பல்கலைக்கழங்களில் போராட்டங்களை அனுமதிக்கலாம், ஆனால், வன்முறையையும், பொதுச் சொத்தை சேதப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது. அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களும் மக்களின் வரிப் பணத்தில் இயங்குகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 10 முதல் 12 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்க நினைக்கிறோம். சட்டத்தை கையில் எடுப்பவர்களை அல்ல. 10 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இடையூறு செய்பவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்து படித்து பணிக்கு செல்லும் கனவுடன் வருகிறார்கள்.Advertise with us
இந்திய அரசும் உயர்க்கல்வித்துறையும் பொதுப் பல்கலைக்கழகங்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் அரசியல் மாணவர்களின் அரசியலாகவே நீடிக்கிறது கிடையாது, அது வெகுஜன அரசியலாக மாறுகின்றது. அதற்கு வளாகத்தில் இடம் கிடையாது. ஒழுக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அவசியம்.” எனத் தெரிவித்தார்.
சுனைனா சிங் பேசுகையில், ”இந்தியாவில் ஜென் ஸி, ஆல்பா தலைமுறையினர் என 65% இளைஞர்கள் இருக்கிறார்கள். அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதே நமது நாட்டின் இலக்கு. பல்கலைக்கழங்கள் அதிகரித்து வருகின்றது, ஆனால், எவ்வளவு தரத்தில் நாம் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.

More Stories
மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு! ஏற்பாடுகள் தயார்!!
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் 50,159 பேருக்கு பட்டம்
ஸ்பேஸ் லிப்ட், கோளரங்கம்… கோவையில் பிரம்மாண்டமாக உருவாகும் அறிவியல் மையம்!