அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மேயர் விசாலாட்சி பேச்சு
திருப்பூர், மார்ச்.9-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இறை வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நல்லூர் பகுதி செயலாளர் ஜெகதீஷ் வரவேற்றார். மாநில இளைஞர் பாசறை துணைச்செயலாளர் விஜயகுமார், சிறுபான்மை நலப்பிரிவு துணை
செயலாளர் ஜான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுகம் வீர கந்தசாமி, கீதாராணி, நெருப்பரிச்சல் பகுதி செயலாளர் கோகுலம்மணி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கலியமூர்த்தி, மகளிரணி செயலாளர் திலகவதி, இலக்கிய அணி செயலாளர் லோகு, பொதுக்குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை
யாற்றினார்கள். அப்போது விசாலாட்சி பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் வரி, மின்கட்டணம், பால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றவர்களை தெருவில் விட்டுவிட்டனர். தி.மு.க. மாநாடு, பொதுக் கூட்டங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்துகின்றனர். குப்பைக்கு வரி போட்ட மோசமான மாநகராட்சி திருப்பூர் மாநகராட்சிதான். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார். கூட்டத்தில் பெண்களுக்கு சேலை, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் அம்மா கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

More Stories
கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!
விசாரணையின்போது இளைஞர் பலி: மானாமதுரையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
நாமக்கல் : பாஜக மாநில துணைத் தலைவர்