கமேனி கொலை செய்யப்பட்டது முதல் 10வது நாளில் ஈரான் போர் தொடர்கிறது..

கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி.– DNS
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 1,230 பேர் ஈரானில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் 397 பேரும், இஸ்ரேலில் 11 பேரும், அமெரிக்கர்கள் 7 பேரும் போர் தொடங்கிய பிறகு பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
லெபனானில், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வாழ்விடங்களிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இஸ்ரேலில் தெற்கு லெபனானின் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தற்போது பள்ளிகள், திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த போரைத் தாண்டியும் மனிதாபிமான உதவிகளும் பொருளாதார பாதிப்புகளும்தான் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

More Stories
அமெரிக்கா – ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை நிறைவு – மத்தியஸ்தர்கள் அறிவிப்பு
திடீரென மிரட்டிய ட்ரம்ப்.. வெளிநடப்பு செய்த ஈரான்.. முடங்கிய முதற்கட்ட பேச்சுவார்த்தை!
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்