March 14, 2026

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் 

சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பரவி வரும் போதைப் பொருட்கள் கலாசாரத்தை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வை பாதிக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள ஜனநாயகமற்ற வழிகாட்டல் நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.வெ.க செயலாளர் மன்மதன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, திருவாடானை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்கள், பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Spread the love