March 15, 2026

பெரம்பலூர், மார்ச்‌.15-

பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.51 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குன்னம் சட்டமன்ற தொகுதி, வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தராஜ பாளையம், வயலப்பாடி, வ.கீரனூர், அகரம்சீகூர், அத்தியூர், ஒகளுர், கழனிவாசல், லெப்பைக்குடிக்காடு, பென்னக்கோணம், வடக்கலூர், பேரளி, பெரியம்மாபாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.51 கோடி மதிப்பிலான பல்வேறு பல்வேறு முடிவுற்றப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வுகளில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக திகழ்ந்து வரும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு  பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். 

                அதன் அடிப்படையில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கோவிந்தராஜப்பாளையம், வ.கீரனூர், அகரம்சீகூர், அத்தியூர், ஒகளுர், கழனிவாசல், பென்னக்கோணம், வடக்கலூர், பேரளி, பெரியம்மாபாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளின் சார்பில் கனிமம் மற்றும் சுரங்கங்கள் நிதியின் மூலம் தலா ரூ.9.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.91.5 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், காடூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களில்  புதிய நியாய விலை கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வயலப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்  என இன்று மட்டும் ரூ.1.51 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் தேவநாதன், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சிவக்குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சேகர், குன்னம்  வட்டாட்சியர் சின்னதுரை, உதவி பெறியாளர் ஆனந்தன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love