சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.குமரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழக துறை சார்ந்த கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்ஐடி, கட்டிடக்கலை, திட்டமிடல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சி படிப்புகளில் (பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டிடக்கலை, கலை அறிவியல் பாடங்கள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தொழில்துறையில் பணியாற்றுவோர், முதுநிலை பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 250 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை தேவையான சான்றிதழ்களுடன் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.cfr.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியீடு
கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
அரசு பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பிற்கு ஸ்பெஷல் பிளான்: அமைச்சர் ராஜ்மோகன் சார்ட்டிங் ஐடியா