தேனியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தேனி, மார்ச் 18,தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்துவரும் பாலியியல் வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி தேனி பங்களாமேடு பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க அரசினை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், அ.ம.மு.க.மாவட்ட செயலாளர் காசிமாயன்,அ.தி.மு.க தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், முத்துச்சாமி, கதிர்காமு உள்பட தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள்,பா.ம.க, தா.ம.க.கட்சி நிர்வாகிகள் உள்ளபட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

More Stories
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/
Rain | மார்ச் 20 வரை இப்படித்தான்.. விடாமல் கொட்டப்போகுது கனமழை.. கோடையில் வெதர்மேன் கொடுத்த குளுகுளு அப்டேட்..!
தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசினார்.