நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தினசரி பண்ணைகளில், முட்டை கொள்முதல் விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் 1ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.80 ஆக இருந்தது பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 4ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.30 ஆக இருந்தது. 10ம் தேதி வரை இந்த விலை நீடித்தது.
அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து கடந்த 17ம் தேதி ரூ. 4.45 ஆனது. இந்த இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை அதிரடியாக 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ஈரான்-இஸ்ரேல் போரால் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், முட்டை விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாக்களில்) : சென்னை 505, பர்வாலா 392, பெங்களூர் 485, டெல்லி 415, ஹொஸ்பேட் 425, ஹைதராபாத் 420, கொல்கத்தா 495, மும்பை 480, மைசூர் 490, விஜயவாடா 430.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 136 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 94 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

More Stories
மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.
நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
நாமக்கல்:ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்…தமிழக முதல்வர் துணை முதல்வரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை…வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்…