March 24, 2026

நினைத்தது நடக்கவில்லை என்றதும்.. பொதுமக்கள் உணர்வார்கள்.. தாவக வேல்முருகனுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில் திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும், மற்றொரு பக்கம் வேட்பாளர்கள் நேர்காணலும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர், திமுகவின் வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையில் திமுக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் இடங்களை கேட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. புதிய கட்சிகளின் வருகை காரணமாக தொகுதிகளை குறைத்து கொள்ளுமாறு திமுக கோரிக்கை வைத்து வந்த நிலையில், சில கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் தொடர்ந்து திமுகவின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

திமுக கூட்டணியில் இருந்து விலகல்

  

ETFs made simpleHDFC Mutual Fundஇந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தவாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து உதயசூரியன் சின்னத்தில் நின்று வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தேர்தலில் தவாகவுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டுமென சில கோரிக்கைகளை முன்வைத்தார் வேல்முருகன். ஆனால் திமுக தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். இதனை தொடர்ந்து திமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

அமைச்சர் சிவசங்கர்

அவருடைய இந்த முடிவு குறித்து திமுகவினர் பெரியளவில் கருத்துக்கள் எதையும் கூறாமல் இருக்கின்றனர். இந்நிலையில் திமுகவின் வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரிடம், தேர்தலுக்கு முன்பாக வரையிலும் திமுகவை நோக்கி அணி அணியாக மற்ற கட்சிகள் வந்த வண்ணம் இருந்தது. இப்படியான சூழ்நிலையில் தாவக கூட்டணியை விட்டு விலகி இருக்காங்க. குறிப்பாக நீங்கள் சார்ந்த மாவட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய விலகல் திமுகவை பாதிக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், தவாக வேல்முருகன் கூட்டணியை விட்டு விலகியது திமுகவிற்கு எந்த விதமான பாதிப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தாது.

தவாக வேல்முருகனுக்கு பதிலடி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த காலங்கள், சட்டமன்றத்தில் எப்படி நடந்துக் கொண்டார் என்பது அனைத்தையும் மக்கள் உற்றுநோக்கி தான் வருகிறார்கள். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திமுக மீது அவர் குற்றசாட்டுகளை வைத்திருந்தால் மக்கள் கருத்தில் கொண்டிருப்பார்கள். பேச்சுவார்த்தை வரை வந்துவிட்டு, தான் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக இந்த குற்றச்சாட்டை கூறுகிறார் என்பதை பொதுமக்கள் தெளிவாக உணர்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Spread the love