ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எல்.ஏ.மகாராஜன்தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். ஆண்டிபட்டி .ஏப்2,ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.மகாராசன் எம்.எல்.ஏ, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரச நாயக்கனூரில் தொடங்கினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.மகாராசன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூர், பிள்ளை முகம் பட்டி, டி. பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம், டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி , மறவபட்டி, கதிர், ராஜதானி உள்பட 28 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கம்யூனிஸ்ட் வெங்கடேஷ் ,தி.மு.க.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செல்வம், ஒன்றிய அமைப்பாளர் அர்ச்சுணன், மாவட்டமாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், பொம்மிநாயக்கன்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அஷ்சயா ராம்குமார், டி. சுப்புலாபுரம் கார்த்தி, செல்லப்பாண்டி, ராஜகோபாலன்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்வேல்மணி பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் மகாராசன் எம்.எல்.ஏவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எல்.ஏ.மகாராஜன்தேர்தல் பிரச்சாரம்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.