July 7, 2026

அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: அரசுக் கல்​லூரி​களில் உள்ள ஆசிரியர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவதற்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் தர வேண்​டுமென அலு​வலர்​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தவெக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான முதல் பட்​ஜெட் இந்த மாத இறு​தி​யில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இந்த பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், தற்​போதைய திட்​டங்​களின் செயல்​பாடு​கள் மற்​றும் துறை​களின் முன்​னேற்​றம் குறித்து ஆய்வு செய்​வதற்​காக முதல்​வர் விஜய் தலை​மை​யில் துறை​கள் ரீதி​யான ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்​கியது.

இது​வரை கூட்​டுறவு மற்​றும் உணவுத்​துறை, வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன.

தொடர்ந்து 3-வது நாளாக உயர்​கல்​வி, வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​களின் ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் பெ.​விஸ்​வ​நாதன், த.லோகேஷ் தமிழ்​செல்​வன், நெ.மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் துறை​கள் சார்ந்த செயலர்​கள், அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

இந்​தக் கூட்​டத்​தில் புதிய திட்​டங்​கள், துறை​களின் செயல்​பாடு​கள் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது. அதன்​படி உயர்​கல்​வித் துறை சார்ந்த ஆலோ​சனை​யில், ஆசிரியர் காலிப் பணி​யிங்​களை நிரப்​புவது, பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமனம் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து பேசப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

குறிப்​பாக தமிழகம் முழு​வதும் உள்ள அரசு கல்​லூரி​கள் மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் உள்ள உதவி பேராசிரியர் மற்​றும் பேராசிரியர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவதற்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் தர வேண்​டுமென அலு​வலர்​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுத​விர வெளி​நாட்டு கல்வி நிறு​வனங்​களை போல், தமிழக உயர்​கல்வி நிறு​வனங்​களின் தரத்தை மேம்​படுத்த என்​னென்ன முயற்​சிகளை முன்​னெ

டுக்​கலாம் என்​பது தொடர்​பாக​வும், கல்​லூரி​கள் கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​த​வும், பல்​கலைக்​கழங்​களின் நிதி​நிலையை சரிசெய்​ய​வும் இந்​தக் கூட்​டத்​தில் ஆலோ​சனை நடத்​தி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது.

தொடர்ந்து துறை வாரி​யான ஆலோ​சனைக் கூட்​டங்​கள் வரும் ஜூலை 22-ம் தேதி வரை நடத்​தப்​பட உள்​ளன என்​ப​து குறிப்பிடத்தக்கது.

Spread the love