மாநில தலைவர் பங்கேற்பு
பழனி ஏப்ரல் 03
பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் கூட்டம் நடைபெற்றது. பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் கூட்டம், மாநிலத் தலைவர் கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என் ஹரிஹர முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ரமேஷ் குமார், மாநிலத் தேர்தல் அலுவலர் வழக்கறிஞர் அனிருத் கர்கா, பழனி கிளை தலைவர் சுந்தரேச குருக்கள், கிளைச் செயலாளர் சங்கரநாராயணன், முன்னாள் கிளை தலைவர் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹர முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிராமண சமூகத்தின் அடிப்படை நிலைப்பாடு தெளிவானது. தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டின் நீண்ட காலம் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டும், பாரதிய ஜனதா தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிராமண சொந்தங்கள் வாக்களிக்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போட்டோ புட் நோட்
பழனியில் தமிழ்நாடு சமாஜம் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கண்பத் கிரேண்ட் அதிபர் என் ஹரிஹரமுத்து பங்கேற்றார்

More Stories
இராமநாதபுரம் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில்மேற்கூரை சூரிய மின் சக்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி
ஒட்டன்சத்திரத்தில்பூமிதானம், பஞ்சமி நிலங்களை மீட்க நிலம் மீட்பு கூட்டு இயக்கம் ஆலோசனை கூட்டம்