புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் மெய்ய நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து

ஆலங்குடி ஆர்.கே.மஹாலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றிக்கான கருத்துக்களை எடுத்துரைத்து,’திராவிட மாடல்’ அரசின் சாதனை திட்டங்களை இல்லம் தோறும் சென்று பிரச்சாரப் பணியில் ஈடுபட்டும், மத்திய பாசிச பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கும் இழைக்கும் அநீதியை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.