April 5, 2026

மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் மருமகன் அபிஷேக்

முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி

புதுடெல்லி: மேற்கு வங்​கத்தை ஆளும் திரிண​மூல் காங்​கிரஸின் (டிஎம்​சி) இளைஞர்
பிரிவு தலை​வ​ராக இருப்​பவர் அபிஷேக் பானர்ஜி. மக்​களவை எம்​.பி.​யான இவரை
முதல்​வர் மம்தா தனது வாரி​சாக முன்​னிறுத்தி வரு​கிறார். இதனால் கட்​சி​யில்
மம்​தாவுக்கு அடுத்த நிலை தலை​வ​ராக அபிஷேக் முன்​னிறுத்​தப்​படு​கிறார். 
இந்​நிலை​யில் 2026 தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் முதல்​வர் மம்​தாவுக்கு இணை​யான
தலை​வ​ராக அபிஷேக் உரு​வெடுத்​துள்​ளார். இரு​வரின் ஒருங்​கிணைந்த தலை​மை,
மேற்கு வங்க அரசி​யலில் ஒரு தனித்​து​வ​மான அரசி​யல் நிலையை உரு​வாக்​கி​யுள்​ளது.
முதல்​வர் மம்​தா​வின் நம்​பிக்​கைக்கு உரிய தளப​தி​யாக அபிஷேக் மாறி வரு​கிறார்.
இது, மாநில தேர்​தல் அரசி​யலில் மம்தாவின் மருமகன் அபிஷேக்​கின் ஒரு
குறிப்​பிடத்​தக்க வளர்ச்​சி​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

Spread the love