இராசிபுரம்:கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்.
நான் பதவியேற்ற பிறகு கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து விட்டேன் மறக்காமல் திமுகவிற்கு வாக்களியுங்கள் மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் மா.மதிவேந்தன்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் மா.மதிவேந்தன் தனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம் சுற்றி உள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை துவங்கினார்.
வெண்ணந்தூர் ஒன்றியத்தின் மூலக்காடு, போயர் தெரு, இந்திரா நகர், பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார் .

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.