April 9, 2026

பெரம்பலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினரின் நிலங்கள் மீட்டு தருவோம் என உறுதி!!! நரிக்குறவ சமூக மக்களுடன் நடனமாடி  கூட்டணி கட்சியினருடன் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர், ஏப்.8-

2026 சட்ட மன்ற தேர்தலில் பெரம்பலூர் தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாஜக, பாமக, ஐஜேகே அமமுக, பாமக, புதிய தமிழகம், மக்கள் ராஜ்ஜியம், தமிழக நாயுடு கூட்டமைப்பு, புரட்சி பாரதம் ஆகிய கட்சி முக்கிய பிரமுகர்களுடன் இன்று காலை தனது பிரச்சாரத்தை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் வாலிகண்டபுரம் கிராமத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் தொடங்கினார்.

பிரச்சாரம் செய்த பகுதிகளில் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வனுக்கு பூரண கும்ப மரியாதையை பெண்கள் வழங்கியதோடு, ஆரத்தி எடுத்து பூமலை தூவி வரவேற்றனர். அதிர் வேட்டுகள் முழங்க ஆரவாரமாக உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்தில் வேட்பாளர் தமிழச்செல்வன் அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி பேசினார். அதிமுக ஆட்சிக்கு அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவி தொகை 10 ஆயிரம் வழங்கப்படும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும், நெல் உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை, ரூ. 25 ஆயிரம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், கட்டணமில்லா ஆண்களுக்கும் பேருந்து பயணத்திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தரப்படும் என்றும், இரண்டாம் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும், ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடைந்த வீரர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு தல ரூ.10 லட்சம் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்காக கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், சிறுபான்மை பெண்களுக்கு சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும். 3ம் கட்ட வாக்குறுதிகளாவன +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். மீன்பிடி காலங்களில் வழங்க நிவாரணம் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ.12000 ஆக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1400 ஆக வழங்க உயர்த்தப்படும். பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ. 1000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளருக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

இதே தொடர்ந்து, வி.ஆர்.எஸ்.எஸ் புரம், அ.குடிக்காடு அனுக்கூர், அனுக்கூர் குடியிருப்பு, பிரம்மதேசம் எம்.ஜி.ஆர் நகர், செல்வநாதபுரம், வல்லாபுரம், முல்லா நகர், வாலிகண்டபுரம், அம்பேத்கர் நகர் தம்பை தேவையூர் கிழக்கு, தேவையூர் மேற்கு, ரஞ்சன்குடி காந்திநகர் காலனி, ரஞ்சன்குடி கோட்டை, ரஞ்சன்குடி அம்பேத்கர் நகர், மங்களமேடு, மங்கலம் (மேற்கு), மங்கலம்(கிழக்கு), எறையூர் சின்னாறு, எறையூர், சர்க்கரை ஆலை, புதுக்குடியிருப்பு, SLR காலனி, நரிகுறவர் காலனி, சமத்துவபுரம் பேரையூர், அயன்பேரையூர், பேரையூர் தைக்கால், வி.களத்தூர், வள்ளியூர், மேற்கு மறவநத்தம், பழைய மறவநத்தம், ராயப்பா நகர், வி.களத்தூர், வண்ணாரம்பூண்டி, ராம்ஜி நகர் திருவாளந்துறை இ.அகரம் உள்ளிட்ட ஊர்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினரின் நிலங்கள் மீட்டு தருவோம் என அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் உறுதி நரிக்குறவ சமூக மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

அப்போது வக்கீல் கணேசன், வேப்பந்தட்டை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் டி.என். சிவப்பிரகாசம், வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பூவை. செழியன், லாடபுரம் த. கருணைராஜா, மாவட்ட அண்ணா தொழில் சங்க தலைவர் வீரபாண்டியன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உமாஹமாவதி, பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் வாலிகண்டபுரம் செல்வராஜ், மற்றும் தாமத தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியினர் அவருடன் கிராமங்கள் தோறும் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love