பக்தர்கள் குவிந்தனர்.
பழனி ஏப்ரல் 20
பழனி முருகன் மலைக்கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை நாளையொட்டி, அதிகாலை நாலு மணிக்கே நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மாலை நாலு முப்பது மணிக்கு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் திருஉலா வரும் காட்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தங்க ரதம் தேரோட்டம் நடைபெற்றது. பின்பு கார்த்திகை மண்டபத்தில் பக்தர்கள் பங்கேற்ற 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. சித்திரை மாத கார்த்திகையையொட்டி பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர்

More Stories
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா