நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மூன்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தவெக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பல முனைகளில் போட்டி நிலவி வருகிறது. நாளையுடன் பரப்புரை நிறைவு பெறவுள்ள நிலையில், வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதனிடையில் நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்றார். இந்நிலையில் திருச்சியில் மத வழிபாட்டு இடங்களுக்கு விஜய் சென்றது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இரண்டு இடங்களில் போட்டியிடும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் தேர்தலிலே இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இதனிடையில் திருச்சிக்கு நேற்று விஜய் பரப்புரைக்கு சென்ற நிலையில் மூன்று மத வழிபாட்டு தல்ங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தோளில் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டு இடம்பெற்று இருந்தது. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதுபோன்று கட்சி அடையாளத்துடன் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதியில் உள்ளத்து.
சிபிஎம் பெ. சண்முகம்
இந்நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறுகையில் தேர்தல் நடத்தை விதிமுறையின்படி மத வழிபாட்டு இடங்களில் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. அதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீறியுள்ளார்.
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
எனவே விஜய் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம். முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதி உட்பட்ட சில இடங்களில் ரோடு ஷோ நடத்தினார் விஜய். அப்போது வயர்லஸ் சாலையில் அந்தோணியார் ஆலயம் முன்பாக பிரச்சார வாகனைத்தை நிறுத்தினார். இதனையடுத்து மண்டியிட்டபடியே சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
வைரலான வீடியோ
முன்னதாக விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த வீடியோ வெளியானவுடனே சோஷியல் மீடியாவில் பலரும் சில விமர்சனங்களை முன்வைத்தனர். கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக விஜய் குரல் கொடுத்தாரா? அப்போது அவர் எங்கு சென்றார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் பரப்புரை
இதனிடையில் நேற்றைய தினம் திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், இன்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து மாலை மூன்று மணி முதல் வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் ரஜினி ரசிகர்கள் ஆதரவு..அதிமுகவை வெற்றிபெற வைப்போம் என பேச்சு
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்றதும் அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?
திருமணம் முடிந்த கையோடு தவெக விஜய் பிரசார வாகனத்தில் ஏறிய மணமக்கள்: வைரல் வீடியோ!