ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நீங்களும் ஆகலாம் ஆடிட்டர்/அரசு அதிகாரி எனும் தலைப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஹ.வாசுதேவன் தலைமை உரையாற்றினார். நிகழ்வில் தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் திருப்பூர் பிரிவின் தலைவர் K.C. செந்தில்குமார் C. அண்ணா அவர்கள் பேசினார். பட்டையக் கணக்கர் எம்.விஷ்ணுகுமார், முன்னாள் தலைவர் பட்டையக் கணக்கர் கே.சி.செந்தில்குமார், ஜிமேப் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பங்குதாரர் பட்டயக் கணக்கர் பி.அருள்ஜோதி, சென்னை, ஜெ.கே.ஷா பட்டையக் கணக்கர் பயிற்சி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு தலைவர் பட்டையக் கணக்கர் எல்லப்பராஜ், சிக்ஸா சுவாதிகா (யுபிஎஸ்சி பயிற்சி மையம்) நிறுவாக இயக்குனர் சுவாதிகா ஏ சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டையக் கணக்கர் மற்றும் இந்திய ஆட்சித் துறை சார்ந்த உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியதோடு அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்விற்கு உள்தர உறுதிப்பாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.கே.ஏ.அழகப்பன் வரவேற்றார், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கே.எம்.குமரகுரு நன்றி கூறினார். இந்நிகழ்வில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நீங்களும் ஆகலாம் ஆடிட்டர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்