சென்னை: வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில், வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் விமானம் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தினமும் 8 ஆயிரம் முதல் 8,500 பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னைவரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்தாலும் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் வருவது தேர்தல் ஆணைய அதிகாரிகளை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

More Stories
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் – மக்களே நோட் பண்ணுங்க!
தேர்தலுக்காக 3 நாட்கள் மதுக்கடை விடுமுறை.. நேற்று மட்டும் மது விற்பனை உச்சம் – எவ்வளவு தெரியுமா?