தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த 30 நாட்களுக்கு மேலாக தேர்தல் பரப்புரைகள் அனல் பறந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து அமைதி திரும்பியுள்ளது. இதனையடுத்து நாளை அனைவரும் ஓட்டு போடுவதற்காக ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகி அமலில் இருந்து வருகின்றன. தற்போது அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்புள்ள நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி பிரிவின் கீழ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விருமுறை அளிக்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக புகார் அளிப்பதற்கு மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது எனவும் அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை செய்துள்ளார். இதனிடையில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், நாளை ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்ட எதையும் நடத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேறு தொகுதியில் இருந்து பிரச்சாரத்துக்காக அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், நேற்றுடன் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விளம்பரத்தை வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு வேட்பாளர்களுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை செல்லாதவை ஆகி விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்குசாவடிக்கு மக்களை அழைத்து வருவதற்கு வேட்பாளருக்கு அனுமதியில்லை. இந்த நடைமுறைகள் தேர்தல் முடியும் வரைக்கும் அமலில் இருக்கும்.

More Stories
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மனு!
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!
நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி வழக்கு: முழு விவரம்