April 24, 2026

டி20 தொடரை இழந்தது இந்திய அணி

ஜோகன்னஸ்பர்க்: இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி தென் ஆப்பிரிக்கா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம் இரவு ஜோகன்​னஸ்​பர்க்​கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இந்​திய மகளிர் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 192 ரன்​கள் குவித்​தது.

கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​களும், ஷபாலி வர்மா 46 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​களும் விளாசி​னார். ஸ்மிருதி மந்​தனா 35 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​கள் சேர்த்​தார்.

193 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க மகளிர் அணி 16.3 ஓவர்​களில் ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து 193 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கேப்​டன் லாரா வோல்​வார்ட் 53 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 14 பவுண்டரி​களு​டன் 115 ரன்​களும், சுனே லஸ் 42 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 183 ரன்​கள் குவித்​தது.

Spread the love