August 7, 2026

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய  வெளியுறவு அமைச்சகம்

APR 24, 2026 

டெல்லி: இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம்  இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து, ஈரான் தலைநகர்  தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கையில், “இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சில விமானச் சேவைகள் தொடங்கப்பட்டதாக வரும் செய்திகள் மற்றும் முந்தைய அறிவுறுத்தல்களின் தொடர்ச்சியாக, இந்தியக் குடிமக்கள் விமானம் மூலமாகவோ அல்லது தரை வழியாகவோ ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளது.

மேலும் விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும், தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, நியமிக்கப்பட்ட தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அது வலியுறுத்தியது.

தேவைப்படுபவர்களுக்காக தூதரகம் அவசரத் தொடர்பு எண்களையும் (+989128109115, +989128109109, +989128109102 மற்றும் +989932179359) மற்றும் மின்னஞ்சலையும் (cons.tehran@mea.gov.in) வழங்கியுள்ளது.

Spread the love