September 15, 2026

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் 17வது ஆண்டு நீர்மோர் வழங்கும் நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் நகர் சார்பாக கோடைக் காலத்தை முன்னிட்டு 17வது ஆண்டாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். கடும் கோடை வெப்பத்தால் அவதிப்படும் மக்களுக்கு இந்நிகழ்வு நிவாரணமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் நகர் நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும், பொதுமக்கள் திரளாக பங்கேற்று மோர் அருந்தி சென்றனர்.

Spread the love