சென்னை: “ஒரு அப்பாவாக மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதைவிட என்ன வேண்டும்?” என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 105-க்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தும் வகையில் முன்னிலை வகித்து வருகிறது.
இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “ விஜய், தான் முதல்வர் ஆக வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அதற்கான களப்பணிகளையும் ஆற்றினார். என்னை விட என் மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
விஜய் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். வெற்றி நமதே என்ற மந்திரமே விஜய்யின் தாரக மந்திரமாக இருந்தது. விஜய்யை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
இதைவிட என்ன வேண்டும்? எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண வெற்றி இல்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று வெற்றி பெற்றதே பெரிய விசியம்” என்று அவர் கூறினார்.

More Stories
விஜய் வீட்டிற்கு நேரில் சென்ற த்ரிஷா: தமிழக வெற்றிக் கழகத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து சந்திப்பு!
தவெக 105+ இடங்களில் முன்னிலை; 2-ம் இடத்துக்கு திமுக, அதிமுக கடும் போட்டி
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை