தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கிய கழகத் தலைவர் தளபதி M. K. Stalin அவர்களுக்கும், கழக இளம் தலைவர் மரியாதைக்குரிய Udhayanidhi Stalin அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
#குன்னம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறவைத்த குன்னம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
வாக்காளபெருமக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில்,குன்னம் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.
எனது வெற்றிக்காக குன்னம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
மேலும் வெற்றிக்காகக் களத்தில் சிப்பாய்களாக நின்று அயராது உழைத்த நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் செயல்வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கழகத் தலைவர் அவர்களின் உறுதிமிக்கக் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, அவரது வழிகாட்டலில் நம் பயணத்தைத் தொடர்வோம் என அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்