திருப்பத்தூர் மே-15.
திருப்பத்தூர் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கும் விழா தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. செயலாளர் சி.இரவிவர்மன் வரவேற்புரையாற்றினார். 2028-29-ஆம் ஆண்டின் மாவட்ட ரோட்டரி ஆளுநர் சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் ஆடிட்டர் ரவிக்குமார், கணேஷ்மல், ஏலகிரிசெல்வம், எழிலரசன்,கிருபாகரன், கிருஷ்ணன், சுப்ரமணியன், லீலாசுப்ரமணியன் உள்ளிட்ட 21-பேருக்கு சேவை செம்மல் விருதுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். ரோட்டரி சங்க ஜவ்வாது மாத இதழ் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியர் அருண்குமார் கௌரவிக்கப்பட்டார். திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் இரண்டு லட்சம் சுந்தரராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

More Stories
திருச்சி, மே.13-
பழனியில் பிராமண சமாஜம் சார்பில் கண்டனம்
திண்டல் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 2026